இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலாண்ட் நிறுவனம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை அறிவித்துள்ளது.
இது அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஓசூர் ஆலையில் பெண்கள் மட்டும் பணிபுரியக்கூடிய பிரத்தியோக பிரோடக்ஷன் லைனை நிறுவியுள்ளது இதனை மார்ச் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தன்று நிறுவனம் அறிவித்தது இந்த அறிவிப்பின் மூலம் வாகன தயாரிப்புத் துறையில் பெண்களை தங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய பிரோடக்ஷன் லைனில் 80 பெண்களை நிறுவனம் பணி அமர்த்தி உள்ளது மேலும் இந்த ப்ரொடக்ஷன் லைனில் வருடத்திற்கு 62,000 இன்ஜின்களை தயாரிக்க முடியும் மற்றும் இந்த பிரோடக்ஷன் லைன் இரண்டு ஷிப்ட்களில் இயங்கும் என நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment